சுடச்சுட

    

    காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட கொண்டாபுரத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ஜி.பார்த்தீபன் பங்கேற்று 338 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 28 ஆயிரத்து 155 ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர் மணி, நகரச் செயலாளர் குட்டி (ரவி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai