Enable Javscript for better performance
பைக் மோதியதில் முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காட்டில் சாலையை கடக்க முயன்ற முதியவர், பைக் மோதியதில் உயிரிழந்தார்.
    ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (65). கூலித் தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆற்காடு-வேலூர் சாலையில் உள்ள ஒரு கடையில் இறைச்சி வாங்கிக்கொண்டு, சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் நடராஜன் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், நடராஜன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai