Enable Javscript for better performance
"போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் தேவை'- Dinamani

சுடச்சுட

    

    "போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் தேவை'

    By DIN  |   Published on : 23rd October 2016 11:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என  அரசை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    வேலூரில் அந்தச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.நடராஜன், பொருளாளர் பி.ரவிச்சந்திரன், அமைப்புச் செயலாளர் ஏ.பீட்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் புண்ணியகோடி வரவேற்றார்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
    ஏழாவது ஊதியக் குழுவை உடனடியாக அமைப்பதுடன், தீபாவளிப் பண்டிகை மாத இறுதியில் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அதற்கு முன்பாகவே சம்பளம் வழங்க வேண்டும்.
    மதம் சார்ந்த நோக்கத்தோடு புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சிப்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் 1,
    பிளஸ் 2 பாடத் திட்டம் மாற்றப்பட வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai