சுடச்சுட

    

    மதுபோதையில் வகுப்புக்கு வந்த அரசுப் பள்ளி மாணவர் நீக்கம்

    By DIN  |   Published on : 23rd October 2016 11:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் மதுபோதையில் பள்ளிக்கு வந்ததோடு, சக மாணவரைத் தாக்கிய மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.
    வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
    இந்தப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த பெருமுகையைச் சேர்ந்த ஒரு மாணவர் சில நாள்களுக்கு முன் மதுபோதையில் வகுப்புக்கு வந்ததோடு, வகுப்பறையில் இருந்த மற்றொரு மாணவரைத் தாக்கினாராம்.
    இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எம்.பரமேஸ்வரிக்கு பள்ளி ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். பள்ளியில் விசாரணை நடத்திய ஆதிதிராவிடர் நல அலுவலர், மாணவரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த விவரத்தை கூறியுள்ளார்.
    மதுபோதையில் வந்த மாணவரை பள்ளியில் இருந்து நீக்கம் செய்து மாற்றுச் சான்று (டிசி) அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    இதற்கிடையில், போதை மாணவரால் தாக்கப்பட்ட அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த மாணவர் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் கேட்டதற்கு, வகுப்பறைக்கு ஒழுங்கீனமாக வந்ததோடு, சக மாணவரையும் தாக்கியதால் பள்ளியில் இருந்து அந்த மாணவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    தாக்குதலுக்குள்ளான மாணவரின் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்பேரில் அந்த மாணவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai