சுடச்சுட

  

  ஆம்பூர் அருகே மின்னூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது.
  மின்னூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு போதிய கட்டட வசதி இல்லாததால் 5 வகுப்பறைகளில் பள்ளி இயங்கி வருகிறது.  அதனால் இடநெருக்கடி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட தேவையான நிலத்தை தானமாக பெறுவதற்கான முயற்சியை ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி மேற்கொண்டார்.  இதையடுத்து மின்னூரை சேர்ந்த மோகன், அவரது குடும்பத்தினர் ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க இசைவு தெரிவித்தனர்.  
  இதையடுத்து எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை மின்னூர் கிராமத்திற்கு சென்று மோகன் குடும்பத்தினரை சந்தித்து பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்க இசைவு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.  மின்னூர் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai