Enable Javscript for better performance
முதல்வர் குணமடைய வேண்டி அதிமுகவினர் பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் குணமடைய வேண்டி அதிமுகவினர் பால்குட ஊர்வலம்

    By DIN  |   Published on : 23rd October 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி, சோளிங்கரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பால்குடத்துடன் ஊர்வலமாகச் சென்று
    வழிபட்டனர்.
    வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 1,503 பால் குடங்களுடன் ஊர்வலம் சோளிங்கரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ஜி.பார்த்தீபன் தலைமை வகித்தார். சோளிங்கர் கருமாரியம்மன் கோயில் முன் இருந்து 1,503 பால் குட ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5,004 பேருக்கு நடைபெற்ற அன்ன தான நிகழ்ச்சியை அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ.அரி தொடங்கி வைத்தார்.
    இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.லோகநாதன், சு.ரவி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.கோபால், முன்னாள் அமைச்சர்கள் முகமதுஜான், வில்வநாதன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, மாவட்ட முன்னாள் செயலாளர்கள் சந்திரசேகரன், அப்பு, சிவசங்கரன், ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai