சுடச்சுட

  

  வேலூர், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் விஜயதசமி இலக்கிய தொடக்க விழாவில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
  34-வது ஆண்டு விஜயதசமி இலக்கிய தொடக்க விழாவில் "நிலா நெருப்பானது' தலைப்பில் இரா.ருக்மணி தனி உரையாற்றினார். தொடர்ந்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
  விழாவுக்கு திருஅருள் குழும இயக்குநர் கே.உலகநாதன் தலைமை வகித்தார். சத்துவாச்சாரி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ஜெயராமன் வரவேற்றார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
  இதனைத் தொடர்ந்து, இன்றைய ஊடகங்களால் "சமுதாயம் பண்படுகிறது', "பாழ்படுகிறது' தலைப்பில் நகைச்சுவை கலந்த வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் பண்படுகிறது தலைப்பில் கவிஞர் மலர்விழி, கவிஞர் கோ, பாழ்படுகிறது தலைப்பில் நாஞ்சில் செல்லக்கண்ணன், விமா அண்ணாமலை ஆகியோரும் பேசினர். நடுவராக கு.ஞானசம்பந்தம் இருந்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai