சுடச்சுட

  

  வேலூரில் விஜயதசமி இலக்கிய விழாவின் நிறைவு நாளில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
  வேலூர் சத்துவாச்சாரி  ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் 34-ஆம் ஆண்டு விஜயதசமி இலக்கிய விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
  நிகழ்ச்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மண்பாடு, பண்பாடு என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல்காதரின் தனி உரை நடைபெற்றது. தொடர்ந்து நகைச்சுவை, நவரசம் கலந்த இன்னிசை பாட்டு பட்டிமன்றத்தை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.
  தேசநலன் காக்கவும், தெய்வஅருள் கிடைக்கவும், பாசவழி நிலைக்கவும், பண்புவழி தழைக்கவும், துணை நிற்பவை பாமரனின் நடையா, பழமையின் வளமா, புதுமையின் பலமா என்ற தலைப்பில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
  இதில், பாமரனின் நடையே என்ற தலைப்பில் சரஸ்வதி நாகப்பன், மகராஜனும், பழமையின் வளமே என்ற தலைப்பில் ஞானசேகரன், அமலாவும், புதுமையின் பலமே என்ற தலைப்பில் வேதநாயகி, ஜெயசித்ரா ஆகியோரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். நடுவராக அரு.நாகப்பன் இருந்து இதனை நடத்தினார்.
  விழாவுக்கான ஏற்பாடுகளை சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ஜெயராமன், திரு
  அருள் குழும நிறுவனர் கே.உலகநாதன் உள்ளிட்ட இலக்கிய விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai