Enable Javscript for better performance
விபத்தில் கட்டடத் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    காவேரிப்பாக்கம் அருகே லாரியும், இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
    சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலன் (36). கட்டடத் தொழிலாளியான இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அம்பத்தூரிலிருந்து ஆரணியை அடுத்த படவேட்டம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தார்.
    காவேரிப்பாக்கத்தை அடுத்த ராமாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த வடிவேலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai