சுடச்சுட

  

  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை பி. சுமதி நல்லாசிரியர் விருது பெற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கே. முருகன் தலைமை வகித்தார். ஆசிரியை மு. கல்யாணி வரவேற்றார்.
  கே.எம்.ஜி. கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் டி. இளவரசன், மேல்ஆலத்தூர் மதரஸை நிஸ்வான் நடுநிலைப் பள்ளித் தாளாளர் பி.பி. பைரோஸ்அஹமத், ஊராட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் பி. கோமளாபாபு, திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஜி. புருஷோத்தமன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர் எஸ். பாஸ்கர் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai