வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
By DIN | Published on : 23rd October 2016 11:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சோளிங்கர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பாணாவரம் அருகே உள்ள போளிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடிகாசலம் (45). விவசாயியான இவர், வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அண்மையில் நிலத்துக்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாணாவரம் காவல் நிலையத்தில் கடிகாசலம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.