சுடச்சுட

  

  வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் தங்க, ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அம்பூர்ப்பேட்டை திருவள்ளுவர் வீதியில் வசித்து வருபவர் தப்ரேஷ். தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவர், வெள்ளிக்கிழமை மாலை உறவினரின் இல்ல விசேஷத்தில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் பெரியப்பேட்டைக்கு சென்றார்.
  இந்நிலையில், நள்ளிரவில் இவரது வீட்டு மாடியின் கதவில் இருந்த பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர், அங்கிருந்த 2 பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 15 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம், மின்சாதனப் பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
  இந்நிலையில், சனிக்கிழமை காலை குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி வந்த தப்ரேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, நகை, பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
  இதுகுறித்து அவர் நகர காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. சுந்தரம், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர்,
  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai