Enable Javscript for better performance
வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்எல்ஏ
    ஆர்.காந்தி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், கழிப்பறை, தெரு விளக்கு உள்ளிட்ட வசதி அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எம்எல்ஏ ஆர்.காந்தியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் சனிக்கிழமை அவர், நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.   ஆய்வின்போது, நகர திமுக செயலாளர் பிஞ்சி டி.பிரகாஷ், துணைச் செயலாளர்கள் ஏஆர்எஸ்.சங்கர், குமார், நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai