சுடச்சுட

  

  வேலூர் கோட்ட எல்ஐசி அலுவலகம் மூலம் நிகழாண்டில் இதுவரை 11,291 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.67.74 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன் தெரிவித்தார்.
  ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வேலூர் கோட்டத்தின் சமுதாய பாதுகாப்பு மாத விழா காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு எல்ஐசியின் வேலூர் முதுநிலை கோட்ட மேலாளர் ஒய்.வெங்கடேஸ்வரலு தலைமை வகித்தார். குழுக் காப்பீட்டுத் துறை கிளை மேலாளர் கே.குமாரசாமி வரவேற்றார்.
  இதில், மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன் கலந்துகொண்டு கல்வி உதவித் தொகை, இறப்பு உரிமத் தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பேசியதாவது:
  இத்திட்டத்தில் கல்வி உதவித்தொகையாக கடந்த 2015-16ஆம் ஆண்டில் 25.04 லட்சம் மாணவர்களுக்கு ரூ.205 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் கோட்டத்தில் 26,033 மாணவர்களுக்கு ரூ.1.56 கோடியும், நிகழாண்டில் தற்போது வரையில் 11,291 மாணவர்களுக்கு 67.74 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
  அதேபோல, கடந்தாண்டு இறப்பு உரிமத் தொகையாக 1,46,000 பேருக்கு ரூ.374.86 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டத்தில் நிகழாண்டு செப்டம்பர் மாதம் வரை 478 பயனாளிகளுக்கு இறப்பு உரிமத் தொகை ரூ.1.62 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
  எல்ஐசியின் வேலூர் கோட்ட வணிக மேலாளர் பி.மூர்த்தி, தானம் அறக்கட்டளை முதுநிலை திட்ட அதிகாரி வி.ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் கே.மோகன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai