சுடச்சுட

  

  வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை (அக். 27) நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தட களம், குழுப் போட்டிகள் நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. தடகளப் பிரிவில் கை, கால் ஊனமுற்றோருக்கு 50, 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து, 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டிகள் நடைபெறுகின்றன.
  பார்வையற்றோருக்கு 50, 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல் போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 50, 100 மீட்டர் ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும், காது கேளாதவர்களுக்கு 100, 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு, ஈட்டி எறிதல் போட்டி நடக்கிறது.
  குழுப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் இறகுப்பந்து, மேஜை பந்து போட்டியும், மனவளர்ச்சி குன்றியோர் பிரிவில் எறிபந்து, காது கேளாதோர் பிரிவில் கபடி போட்டியும் நடைபெறுகிறது.
  போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்கள் மாநிலப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டியில் பங்கேற்போர் அரசு வழங்கிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
  இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் மாவட்ட விளையாட்டு அலுவலரை அலுவலக நேரங்களில் 0416-2221721 அல்லது 74017-03483 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai