சுடச்சுட

    

    ஆற்காடு அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
     ராணிப்பேட்டை, நவல்பூர், வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் மகன் பாபு (23). இவர் தொழிற்படிப்பு படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார்.
    இந்நிலையில்  திங்கள்கிழமை மாலை பாபு தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ரத்தினகிரிக்குச் சென்றார். பின்னர் அங்குள்ள அணுகுச் சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்த புகாரின்பேரில், ரத்தினகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai