Enable Javscript for better performance
இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து 18 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து 18 பவுன் திருட்டு

    By DIN  |   Published on : 25th October 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டறம்பள்ளியில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     நாட்டறம்பள்ளி, நேரு தெருவைச் சேர்ந்தவர் குமார் (55). இவர் நாட்டறம்பள்ளி பிரதானசாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 பவுன் நகையை சில ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்திருந்தார். இந்நிலையில் அடகு வைத்திருந்த 18 பவுன் நகையை பணம் செலுத்தி திங்கள்கிழமை மீட்டார். அதனை தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு வங்கியின் எதிரே உள்ள மளிகைக் கடைக்குச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனத்தின் பெட்டி திறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரிய வந்ததும் தெரியவந்தது.  இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai