சுடச்சுட

  

  உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   மாவட்ட ஊராட்சி தனி அலுவலராக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊராட்சிகள் உதவி இயக்குநரும், கிராம ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  கிராம ஊராட்சிகளின் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை (அக்.25) முதல் வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்பதால் ஊராட்சிகளின் பதிவேடுகள், பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத காசோலைகள், வங்கிக் கணக்கு புத்தகங்களை பொறுப்பில் எடுத்துக் கொண்டமைக்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  அனைத்து ஊராட்சிகளில் பொறுப்புகள் ஒப்படைத்த தகவல்களை சேகரிக்க தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  காசாக்கப்படாமல் நிலுவையில் உள்ள காசோலைகளை வங்கியில் அனுமதிக்கும்போது வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதலுடன் அனுமதிக்க வேண்டும் என்ற தகவலை முன்னோடி வங்கி மேலாளருக்கு உடனடியாக சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai