சுடச்சுட

    

    ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற இளைஞர் தவறி விழுந்து சாவு

    By DIN  |   Published on : 25th October 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் அருகே பேருந்தில் இருந்து இறங்க முயன்ற இளைஞர் தவறி விழுந்ததில் இறந்தார்.
    குடியாத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வேலூருக்குச் சென்றது.
    குடியாத்தம் ரயில்வே மேம்பால நிறுத்தத்தில் பேருந்து நிற்பதற்கு முன்னே அதில் பயணம் செய்த சுமார் 25 வயதுள்ள இளைஞர் கீழே அவரசமாக இறங்கியுள்ளார். அப்போது மேம்பால சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் கீழே விழுந்து இறந்தார்.  இதுதொடர்பாக நகர போலீஸார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai