சுடச்சுட

    

    வேலூரில் தீபாவளி பட்டாசு விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.
    தீபாவளிப் பண்டிகை என்றாலே புதுத் துணி, பட்டாசு, தின்பண்டங்கள் தான் பிரதான இடத்தை பெற்றிருக்கும். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதுப்புது வகைகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வரும்.
    நிகழாண்டில் சில்வர் ட்ராப்ஸ், 10 கலர் கொண்ட தீப்பெட்டி மத்தாப்பு என சிலவற்றைத் தவிர்த்து கடந்த காலங்களில் விற்கப்பட்ட ரகங்கள்தான் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
    மேலும் கடந்தாண்டு தீபாவளிப் பண்டிகையின்போது விற்கப்பட்ட விலையைக் காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் வரையில் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சங்கு சக்கரம் பெட்டி ரூ.40 முதல் ரூ.100 வரையிலும், அணுகுண்டு ரகம் ரூ.120 வரையிலும், 1000 எண்ணிக்கையிலான சரவெடி ரூ.200க்கும் விற்கப்படுகிறது.
    தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 5 தினங்களே இருப்பதால் பட்டாசு கடைகளில் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

    சீன பட்டாசு விற்பனையை கண்காணிக்க குழு அமைப்பு
    மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சீன நாட்டு பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மாவட்டத்தில் சீன பட்டாசு விற்பனையை கண்காணித்து பறிமுதல் செய்வதற்காக மண்டல துணை வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai