சுடச்சுட

    

    வேலூரில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 862 மனுக்கள் பெறப்பட்டன.
     மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம், பட்டா, புதிய குடும்ப அட்டை, கடனுதவி, முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 862 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய துறைரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
     தொடர்ந்து, அணைக்கட்டு அருகே கழனிப்பாக்கம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம், இஸ்லாமிய மகளிர் உதவும் சங்கம் மூலம் ஏழை இஸ்லாமிய மகளிர் பெட்டிக் கடை, துணி வியாபாரம் போன்ற சுய தொழில்கள் செய்திட 47 பேருக்கு ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலை, வாலாஜா வட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
     மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட இஸ்லாமிய மகளிர் உதவும் சங்கச் செயலாளர் சாஹிதா நீலோபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai