Enable Javscript for better performance
நாட்டறம்பள்ளி அருகே சிறுத்தைப் புலிகள் நடமாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி அருகே 2 சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலால் அப்பகுதியில் வனத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் முகாமிட்டுள்ளனர்.
    வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், வெலக்கல்நத்தம் ஊராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதி ஒட்டி மலைகுண்டு காட்டுப் பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் 2 சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் உள்ளதாக திருப்பத்தூர் வனத் துறையினருக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தகவல் தெரிவித்தனர்.
    இதனையடுத்து திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் திருப்பத்தூர் வனச் சரக அலுவலர் பரமசிவம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினர், நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் சச்சிதானந்தன் தலைமையில் வருவாய்த் துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் சிறுத்தைப் புலிகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க பட்டாசுகள், தீப்பந்தங்களை தயார் நிலையில் வைத்து பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினர் இரவு முழுவதும் கண்காணித்து வருகின்றனர். நாட்டறம்பள்ளி அருகே சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    சிறுத்தைகளின் நடமாட்டத்தை உடனடியாகக் கண்டறித்து அவற்றைப் பிடித்து, வேறு காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai