சுடச்சுட

    

    பள்ளிப் பேருந்து மோதியதில் மாணவன் சாவு: கிராம மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 25th October 2016 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் மாணவர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் தினேஷ்குமார் (9). வாணியம்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை தினேஷ்குமார் பள்ளிப் பேருந்தில் செல்வதற்காகச் சென்றபோது, மற்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி பேருந்து செல்ல முயன்றது. இதைப் பார்த்து மாணவர் ஓடி வந்துள்ளார். அப்போது தினேஷ்குமார் மீது பள்ளிப் பேருந்து மீது உராய்ந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார். இதில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் அடைந்து மயங்கியுள்ளார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  தினேஷ்குமார் உயிரிழந்தார்.  
    இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் கேசவன் மற்றும் போலீஸார், வாணியம்பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ நடந்த இடம் ஜோலார்பேட்டை எல்லைக்கு உள்பட்டது என்பதால், மேல் விசாரணைக்காக ஜோலார்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் தினேஷ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூடியிருந்தனர். அப்போது உரிய இழப்பீடு வழங்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோர் தினேஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி சுந்தரம், காவல் ஆய்வாளர் கேசவன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    இதனையடுத்து டிஎஸ்பி சுந்தரம், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மருத்துவமனை அருகே வருமாறு அழைத்தார். அதையடுத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
    பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து பள்ளிப் பேருந்து ஓட்டுநர் முருகேசனை கைது
    செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai