சுடச்சுட

  

  ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.திருஞானம் வரவேற்றார். பொருளாளர் பி.என்.பக்தவச்சலம் வரவு செலவுகள் கணக்குகளை வாசித்தார். விழாவில் நன்கொடை வழங்கியவர்கள் மற்றும் உபயதாரர்கள் கெளரவிக்கப்
  பட்டனர்.
  இதில் செயலாளர் ஒய்.அக்பர் ஷெரீப், வேலூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன், ராணிப்பேட்டை ஸ்கடர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புசுரேஷ், ஆற்காடு அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கு.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai