சுடச்சுட

  

  முறைகேடு புகார்: வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

  By DIN  |   Published on : 25th October 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் விதிகளை மீறி ரூ. 3 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் அனுமதி வழங்கியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் ரவி. இவர் வேலூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்தபோது, விதிமுறைகளை மீறி ரூ. 3 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரண்யாதேவிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார்.
  இதனைத் தொடர்ந்து, அவர் நடத்திய விசாரணையில், விதிகளை மீறி டெண்டர் விடுத்து முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதுடன், அது
  குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  
  இந்த அறிக்கையின் அடிப்படையில் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவியை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார்.
  இதேபோல, மாவட்டத்தில் உள்ள 19 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி உதவி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai