சுடச்சுட

    

    2020-இல் பாலிமரின் தேவை 20 மில்லியன் டன்னாக இருக்கும்: ஜி.விசுவநாதன்

    By DIN  |   Published on : 25th October 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருகிற 2020-இல் நமது நாட்டுக்கு பாலிமரின் தேவை 20 மில்லியன் டன்னாக இருக்கும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.
    வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட அறிவியல் பள்ளியின் ரசாயனத் துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட பாலிமரில் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. விழாவுக்கு தலைமை வகித்து சிறப்பு மலரை வெளியிட்டு வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
    மனித வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் காரணியாக பாலிமர் உள்ளது. பாலிமர் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தமான பணிகள் பல்வேறு நாடுகளில் வேகமாக நடந்து வருகின்றன. பாலிமர் உற்பத்தியில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வருகிற 2020-இல் நமது நாட்டுக்கு பாலிமரின் தேவை 20 மில்லியன் டன்னாக இருக்கும்.
    அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் மருத்துவத்தில் தோல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளில் பாலிமர் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. விஐடி பல்கலை.யும் அதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது என்றார்.
    புணேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.என்.கணேஷ் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், சிறப்பு குறுந்தகடை வெளியிட்டுப் பேசியதாவது:
    கடந்த 10, 15 ஆண்டுகளில் பாலிமர் ஜவுளி உற்பத்தி, விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தியில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஐஐடி நிறுவனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும், ஐஐஎஸ்சி நிறுவனம் அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
    அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மக்களுக்கு கல்வி, சுகாதாரம் அளிப்பது முக்கியப் பணியாகும். அதனை அரசுடன், தனியார் நிறுவனங்கள் இணைந்து வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
    போர்ச்சுக்கல் நாட்டுப் பேராசிரியை இசபெல் எம்.மரிச்சோ, விஐடி துணைவேந்தர் ஆனந் ஏ.சாமுவேல், பதிவாளர் கே.சத்தியநாராயணன், ரசாயனத் துறை தலைவர் ஏ.ஷீலா, அமைப்பாளர் விஜயகிருஷ்ணா காரி, இணை அமைப்பாளர் அகிலா சிவராம
    கிருஷ்ணா, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசாயன பாலிமர் நிபுணர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், பிரதிநிதிகள், கல்லூரி, பல்கலை. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai