சுடச்சுட

  

  வேலூர் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக 60 பேருக்கு பரோலில் செல்ல சிறை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

   குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் மட்டும் அவர்களது நன்னடத்தையைக் காரணம் காட்டி பரோலில் செல்ல அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
   வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் பலர் தீபாவளிப் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட பரோலில் செல்ல அனுமதி கோரி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.  பரோலில் வெளியே செல்லும் கைதிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறித்து மாவட்டக் காவல் துறை அளித்த சான்றின் அடிப்படையில் 60 பேருக்கு மூன்று நாள் பரோல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து சிறை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ஆயுள் தண்டனை பெற்றவர்களில் நன்னடத்தை அடிப்படையில் பரோலில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் தற்போது 60 பேர் மூன்று நாள் பரோலில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai