Enable Javscript for better performance
ஊருக்குள் நுழைந்த சிறுத்தைப் புலி: அச்சத்தில் நாட்டறம்பள்ளி பகுதி மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஊருக்குள் நுழைந்த சிறுத்தைப் புலி: அச்சத்தில் நாட்டறம்பள்ளி பகுதி மக்கள்

    By DIN  |   Published on : 26th October 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே ஊருக்குள் நுழைந்த சிறுத்தைப் புலியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
     நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதியை ஒட்டியுள்ள காட்டுப் பகுதி அருகே சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பத்தூர் வனச் சரக அலுவலர் பரமசிவம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் அப்பகுதியில் திங்கள்கிழமை முகாமிட்டனர்.
    மேலும், பொதுமக்கள் உதவியுடன் இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் எம்ஜிஆர் நகர் பகுதி அருகே மலைக் குன்றின் மேல் ஒரு சிறுத்தைப் புலி நடமாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.
    தகவலறிந்த வனத் துறையினர் அங்கு  சென்று பொதுமக்கள் உதவியுடன் தீப்பந்தம் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், தாரைத் தப்படை அடித்தனர்.
    இதையடுத்து சிறுத்தைப் புலி மீண்டும் வனப் பகுதிக்குள் ஓடி மறைந்தது. பின்னர் இரவு 8 மணியளவில் மலைக் குன்று அருகே மீண்டும் வந்த சிறுத்தைப் புலி பின்னர் வனப் பகுதிக்குள் ஓடி மறைந்தது.
     சிறுத்தைப் புலி நடமாட்டத்தை அறிந்த அப்பகுதி மக்கள் தாங்கள் வளர்த்து வரும்  கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    தொடர்ந்து வனத் துறையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai