சுடச்சுட

    

    குடியிருப்புப் பகுதியில் பாறைகளை வெட்டிக் கடத்த முயற்சி: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்

    By DIN  |   Published on : 26th October 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த பாறைகளை வெட்டிக் கடத்தப் பயன்படுத்திய பொக்லைன், பாறையைத் துளையிடும் டிராக்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
     காட்பாடி வட்டம், பொன்னை ஊராட்சியில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா நினைவுக் குடியிருப்புகள் உள்ளிட்ட பணிகளை வருவாய் ஆய்வாளர் வெங்கடகுமார், கிராம நிர்வாக அலுவலர் தீனா ஆகியோருடன் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொன்னை பஜார் வீதியில் பாறையை உடைக்கும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, குடியிருப்புகளுக்கு மத்தியில் அரசு நிலத்தில் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பாறையை, சில நபர்கள் பொக்லைன் இயந்திரம், பாறை துளையிடும் டிராக்டர் ஆகியவற்றைக் கொண்டு வெட்டிக் கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.  
     பின்னர் அப்பகுதிக்கு வட்டாட்சியர் சென்றபோது, பாறை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அவர் மாவட்ட புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, வெட்டியெடுக்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான கட்டுக் கற்களை அத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பாறைகளை வெட்டப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், பாறை துளையிடும் டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொன்னை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
     தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகளும், போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai