சுடச்சுட

    

    குறித்த நேரத்தில் மின்சார ரயில்களை இயக்க விரைவில் நடவடிக்கை: அனுபம் சர்மா

    By DIN  |   Published on : 26th October 2016 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை-அரக்கோணம் இடையே மின்சார ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா தெரிவித்தார்.
    ரயில்வே மனவளர்ச்சி குன்றியோர் நலப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க அரக்கோணம் வந்த அனுபம் சர்மா நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    சென்னை மூர் மார்க்கெட் - பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே 5 மற்றும் 6-ஆவது இருப்புப் பாதைகள் அமைக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை-அரக்கோணம் இடையே மின்சார ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதைத் தொடர்ந்து இப் பிரிவில் மின்சார ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இப்பிரிவில் மின்சார ரயில்கள் குறித்த நேரத்தில் இயங்கும்.
    தீபாவளி பண்டிகைக்காக பயண முன் பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் முடிந்துவிட்டது குறித்து பயணிகளிடம் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
    அடுத்த பண்டிகை காலங்களில் இது போன்று நடைபெறா வண்ணம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    செங்கல்பட்டு-அரக்கோணம் மின்மயமாக்கல் பணிக்கான ஒப்புதல் இதுவரை ரயில்வே வாரியத்திடம் இருந்து வரவில்லை. அங்கிருந்து உத்தரவுகள் வந்தவுடன் பணிகள் உடனே தொடங்கப்படும் என்றார்.
    இதையடுத்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நைனாமாசிலாமணி, ரகுநாதன், மோகன்ராஜ், கெளதம், சரஸ்வதியம்மாள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்ட மேலாளரிடம் அளித்தனர்.  

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai