ஜெயலலிதா நலமடைய வேண்டி யாகம்
By DIN | Published on : 26th October 2016 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆயுஷ்ய யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி வேலூர் ஒன்றிய அதிமுக சார்பில் பைரவர் அபிஷேகம், ஆயுஷ்ய, மித்ருஞ்சய யாகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
இதில் மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி பத்மநாபன், முன்னாள் எம்எல்ஏக்கள் வி.எஸ்.விஜய், ம.கலையரசு, சி.ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, ஆவின் தலைவர் வேலழகன் உள்பட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.