சுடச்சுட

  

  மத்திய அரசின் கள விளம்பரத் துறை சார்பில் தாய் சேய் நலம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் குறித்த விழிப்புணர்வு முகாம் உமர்ஆபாத்தில் அண்மையில் நடைபெற்றது.
   முகாமுக்கு கைலாசகிரி ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட கள விளம்பரத் துறை அலுவலர் ஜெயகணேஷ் வரவேற்றார். குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
   மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மணிமேகலை பேசியதாவது:
  5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக அனைத்து தடுப்பூசிகளையும் போட வேண்டும். 15 வயதிலிருந்து 19 வயதுக்கு உள்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கு கல்வி, கவனச் சிதறல் உள்ளிட்ட பல்வேறு சுமைகள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகத் தான் இந்த வயதுக்கு உள்பட்ட பருவத்தினர் அதிகமாக தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
  அவர்களுக்கு தகுந்த மனநல ஆலோசனைகள் வழங்க அனைத்து மருத்துவமனைகளிலும் மனநிலை ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றை பொதுமக்கள்
  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai