சுடச்சுட

    

     

    நாளைய வேலைகளை இன்றே செய்பவர்கள் சாதனை மனிதர்கள் என திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கவிஞர் கவிதாசன் கூறினார்.
     திருவள்ளுவர் பல்கலைக்கழக தமிழ்த் துறையும், குடியாத்தம் கே.எம்.ஜி. அறக்கட்டளையும் இணைந்து நடத்திய வள்ளுவரியல் சொற்பொழிவு-2016 பல்கலைக்கழக பல்நோக்கு கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் "சமகாலச் சிக்கல்களுக்குத் திருக்குறள் வழித் தீர்வுகள்' என்ற தலைப்பிலான சொற்பொழிவும், வள்ளுவர் சிந்தனையில் முதலிடம் பெறுவது சமூகமே தவிர அரசியல் அல்லது பொருளாதாரம் என்பது குற்றமே என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது.  
    பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ரா.செயராமன் வரவேற்றார். விழாவில் கே.எம்ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை
    வகித்தனர்.
    கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் சொற்பொழிவு அறிமுக உரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ப.அசோகன், பல்கலைக்கழக புல புதல்வர் வி.பெருவழுதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் தலைமை உரை நிகழ்த்தினார்.  தொடர்ந்து சம காலச் சிக்கல்களுக்கு திருக்குறள் வழித் தீர்வுகள் என்ற தலைப்பில் கோவை ரூட் நிறுவன மனித வளத் துறை இயக்குநரும், கவிஞருமான கவிதாசன் பேசியாதாவது:
    திருக்குறளை வாழ்வியலில் செயல்படுத்தினால் வாழ்க்கை சிறக்கும். இந்நிலையில் இன்றைய வேலைகளை இன்றே செய்பவர்கள் சாதாரண மனிதர்களாகவும், நாளைய வேலைகளை இன்றே செய்பவர்கள் சாதனை மனிதர்களாவும் ஆகின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் சாதனை மனிதர்களாக வேண்டும் என்றார்.
    முன்னதாக கே.எம்.ஜி.அறக்கட்டளை சார்பில் தமிழ் இளங்கலைப் பிரிவில் தகுதி வாய்ந்த குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி தமிழ்த்துறை இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆர்.ரம்யா,ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு நிதியும், திருவள்ளுவர் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்களையும் அறக்கட்டளை அறங்காவலர்கள் வழங்கினர்.
    முடிவில் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் ஜா.ஜெயகுமார் நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai