சுடச்சுட

    

    நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி "டெல்' தொழிலாளர்கள் மனு

    By DIN  |   Published on : 26th October 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூன்று மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு வெடிமருந்து தொழில் நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
     காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் மாநில அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து தொழில் நிறுவனம் உள்ளது.
    இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, 13 சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai