Enable Javscript for better performance
நீதிமன்றங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்றங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 26th October 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
     இதுகுறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     மாவட்ட நீதிமன்றங்களில் சுருக்கெழுத்து, தட்டச்சர் நிலை 3 பதவிக்கு காலியாகவுள்ள 10 இடங்கள் தாற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
    விண்ணப்பிக்க விரும்புவோர் h‌t‌t‌p:​ec‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n‌v‌e‌l‌l‌o‌r‌e என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் முதன்மை மாவட்ட நீதிபதி, வேலூர்-632 009 என்ற முகவரிக்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai