சுடச்சுட

  

  பள்ளிகொண்டா அருகே உள்ள ஏவிடி சீனியர் செகன்டரி பள்ளியில் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தொடக்கம் மற்றும் கல்வி கருத்தரங்கம் ஒடுக்கத்தூரில் அண்மையில் நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஹெச்.மிட்டாலால் சுரானா தலைமை வகித்தார். ஏவிடி வித்யாலயா பள்ளி ஆசிரியை நசீமா தஸ்வீன் வரவேற்றார். மைசூர் பிலோமினா கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் விஜயன் நீட் தேர்வு குறித்து அறிமுக உரையாற்றினார்.    வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். பள்ளிகொண்டா மெர்சிஸ் பள்ளி ஆலோசகர் ராமதாஸ், மடையாப்பட்டு ஊராட்சித் மன்றத் தலைவர் கஜேந்திரன், பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் முனியாண்டி, செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றோர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai