சுடச்சுட

  

  மத்திய அரசு மீதான விமர்சனங்களை திசை திருப்பவே பொதுசிவில் சட்டம்:  ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 26th October 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் மீது எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களை திசை திருப்பவே பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக முயற்சி செய்வதாக மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார்.
   ஷரியத் பாதுகாப்புப் பேரவை டிரஸ்ட் மற்றும் மஜ்லிசே தஹஃபுசே ஷரியத் டிரஸ்ட் சார்பில் கண்டனக் கூட்டம் வாணியம்பாடி அரபிக் கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜவாஹிருல்லா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   பொதுசிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பல்வேறு பண்பாடு, கலாசாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான சமுதாய மக்களின் நலன்களையும் பாதிக்கும்.
  இதுகுறித்து அனைத்து மக்களிடமும் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும். மத்திய அரசு மீதான கடுமையான விமர்சனங்களை திசை திருப்பவே பொதுசிவில் சட்டம் கொண்டு வர பாஜக முயற்சி செய்து வருகிறது. இதனை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்கும்.
  தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்து பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்க்கக் கோருவோம். இலங்கை, யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சேர்ந்து புதன்கிழமை நடத்தும் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்றார்.
   முன்னாள் எம்எல்ஏ அஸ்லம் பாஷா, மாவட்டச் செயலாளர் ஷூகூர் அஹமத், மாவட்ட பொருளாளர் சையத் ஜாவித், நகரச் செயலாளர் ஏஜாஸ் அஹ்மத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர பொறுப்பாளர் முஹம்மத் அனீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai