சுடச்சுட

    

    செங்கம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான குட்டையில் தண்ணீர் குடித்த 10 ஆடுகள் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தன.
     செங்கத்தை அடுத்த கருங்காலிபாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (45). இவர், தனக்குச் சொந்தமான 30 ஆடுகளை திங்கள்கிழமை ஆண்டிப்பட்டி கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் மேய்த்துவிட்டு, பிற்பலில் அந்தப் பகுதியில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான குட்டையில் தண்ணீர் குடிக்க விட்டுள்ளார்.
     அப்போது, தண்ணீர் குடித்தவுடன் அதே இடத்தில் 10 ஆடுகள் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. இதையடுத்து மீதமிருந்த ஆடுகளை தண்ணீர் குடிக்கவிடாமல் கோவிந்தசாமி தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும், வனத் துறையினர் இதுவரை அந்த குட்டை தண்ணீரில் என்ன கலந்துள்ளது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  இதனிடையே, வன விலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாகவும், இந்த தண்ணீரை மனிதர்கள் பருகியிருந்தால், அவர்கள் உயிரிழக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், குட்டையில் உள்ள தண்ணீரில் என்ன கலந்துள்ளது என்பதை வனத் துறை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்தப் பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai