Enable Javscript for better performance
"விதி மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்'- Dinamani

சுடச்சுட

    

    விதிமுறைகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கூறினார்.
     வாணியம்பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அலுவலர்கள் நெக்குந்தி சுங்கச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனை மேற்கொண்டிருந்தார்.
     அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், லாரியின் பின்புறத்தில் ஆள்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்று சரக்கு லாரியில் ஆள்களை ஏற்றிச் செல்வது, ஆட்டோக்களில் பள்ளி மாணவர்கள், பயணிகளை அதிகளவு ஏற்றிச் செல்வது, அதிவேகமாக செல்லும் பள்ளி வாகனங்கள், உரிய ஆவணங்களின்றி இயங்கும் வாகனங்களைக் கண்டறிந்தால் அவை கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும், மேலும் வாகன ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai