சுடச்சுட

  

  ஆலங்காயம் அருகே 20 ஆண்டுகாலமாக பழுதடைந்துள்ள  சாலையை அமைச்சர் நீலோபர் கபீல் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
  ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மங்கானூர் வட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
  நரசிங்கபுரத்திலிருந்து மங்கானூர் வட்டம் வரையில் உள்ள சுமார் 5 கி.மீ. தொலைவிலான சாலை கடந்த 20 ஆண்டுகாலமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆலங்காயத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீலிடம், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார் மற்றும் மங்கானூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பழுதடைந்த சாலை குறித்தும், அதனை சீரமைக்கும் படியும்  கோரிக்கை விடுத்தனர்.
   இதையடுத்து 20 ஆண்டுகாலமாக சீரான சாலை வசதி இல்லாததை அறிந்த மங்கானூர் வட்டம் பகுதியை அமைச்சர் நீலோபர் கபீல் நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சரை சூழ்ந்து கொண்ட அப்
  பகுதி மக்கள், பல ஆண்டுகாலமாக சாலை வசதி இல்லை என்றும், மழைக் காலத்தில் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தனர். சாலையை பார்வையிட்ட அமைச்சர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, விரைவில் தார்ச் சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
   ஆய்வின்போது, நகர அதிமுக செயலாளர்கள் சதாசிவம் (வாணியம்பாடி), பாண்டியன் (ஆலங்காயம்), பேரூராட்சி முன்னாள் தலைவர் மஞ்சுளா கந்தன், மாவட்டப் பிரதிநிதிகள் பிரகாசம், பசுலூர் ரஹ்மான், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai