சுடச்சுட

  

  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆம்பூர் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு வழங்க வேண்டும், மாநில அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதிய திருத்தக்குழுவை உடனடியாக நியமித்து இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்.
  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து ஏற்கெனவே 2003-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையில், பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் மு.குமரன், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ப.ரமேஷ், பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  அரக்கோணத்தில்...
  அரக்கோணம், அக். 26: அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைத்தலைவர் பார்த்தீபன் தலைமை வகித்தார்.
  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ஏபிஎம் சீனிவாசன், நிர்வாகிகள் குமார், அன்பு, கிருஷ்ணன், கந்திர்பாவை, கல்யாணி, உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai