சுடச்சுட

  

  செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கரகாட்டக்கலைஞருடைய சகோதரி மகன் கொலை செய்யப்பட்டு, சடலம் வேலூர் மலைப்பகுதியில் புதன்கிழமை மீட்கப்பட்டது.
   வேலூர், கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த வர் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள். இவரது வீட்டிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ. 4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், செம்மரக் கட்டை கடத்தலில் தொடர்பிருப்பதாகக் கூறி மோகனாம்பாள், அவரது அக்காள் நிர்மலாவின் மகன் சரவணன் (30)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
   பின்னர் ஜாமீனில் வெளிவந்த சரவணன் தனது மனைவி தேவிபாலா, இரு குழந்தைகளுடன் வசந்தபுரத்தில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியே சென்ற சரவணன் அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், தேவிபாலாவின் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர், சரவணனை விடுவிக்க வேண்டுமெனில், ரூ. 3 கோடி தர வேண்டுமெனக் கூறியதாகத் தெரிகிறது.
   இந்நிலையில் சரவணனை மீட்டுத் தருமாறு தெற்கு காவல் நிலையத்தில் தேவிபாலா செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், காட்பாடியைச் சேர்ந்த ரெளடி ஜானியுடன் இருந்த முன்விரோதத்தில் சரவணன் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஓல்டு டவுனைச் சேர்ந்த ஜானியின் கூட்டாளியான அசேன் (30) உள்ளிட்ட இருவரைப் பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சரவணனைக் கடத்தி செங்காநத்தம் மலைப் பகுதியில் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
   இதையடுத்து செங்காநத்தம் மலைப்பகுதிக்கு புதன்கிழமை சென்ற போலீஸார், கத்திக்குத்துக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த சரவணனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து,  விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், தலைமறைவாக உள்ள ரௌடி ஜானி உள்பட 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai