சுடச்சுட

  

  ஆம்பூர் அருகே கைலாசகிரிக்கு செல்லும் மலைப்பாதையை வேலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு சிறப்பு பூஜைகளும், ஆடிக் கிருத்திகை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 800 படிகளைக் கொண்ட இந்த மலையில் ஆடிக்கிருத்திகையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்ல சுமார் 5 கி.மீ. தொலைவு தார்ச் சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
  கோயிலின் அடிவாரம் வரை தார்ச் சாலையை அமைத்துக் கொடுக்கவும், கைலாசகிரி
  மலையை சுற்றுலாத் தலமாக்கவும் ஜெயந்தி பத்தமநாபன் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். அதன்பேரில் வேலூர் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியை பார்வையிட்டுச் சென்றார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மலைப் பாதையை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன், பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் டி.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai