Enable Javscript for better performance
சாதனை மாணவிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சதுரங்கப் போட்டியில் சாதனை படைத்த  வாலாஜாபேட்டை காந்தி மிஷன் நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
    இப்பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி பி.சங்கீதா அண்மையில் திருவண்ணாமலை ஆலந்தூர் சரஸ்வதி மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். இதையடுத்து மாணவிக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார்.
     வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எ.சந்திரா, பள்ளி தலைமை ஆசிரியர் ந.சசிகலா, உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன், தொழில் அதிபர் அமிர்தகடேசன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai