சுடச்சுட

  

  தீபாவளிப் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தி வேலம் மதர் இந்தியா பள்ளி, ஆயிலம் ஸ்ரீ கலைமகள் மழலையர் பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் எம்.உஷா தலைமை வகித்தார். பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் எம்.விஜயலட்சுமி வரவேற்றார்.
   நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர் அ.கோ.அண்ணாமலை பங்கேற்று மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி
  யசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலத்தின்போது, தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாத, மகிழ்ச்சியான பண்டிகையாகக் கொண்ட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் வழங்கினர்.  பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
  ஆற்காட்டில்...
  ஆற்காடு, அக். 26: ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்து இல்லா தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
   நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை ஹேமலதா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஜி.ரவி முன்னிலை வகித்தார். ஆற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல், தீயணைப்புத் துறையினர் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் போது  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்து அது குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கினர். ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai