Enable Javscript for better performance
துப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைது செய்யக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைது செய்யக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 27th October 2016 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபேட்டையில் துப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைதுசெய்யக் கோரி, துப்புரவுத் தொழிலாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
    வாலாஜாபேட்டை நீதிமன்ற வளாகம், குடியிருப்புப் பகுதியில் கொசு மருந்து அடிக்கவும், சுத்தம் செய்யவும், மேற்பார்வையாளர் விநாயகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை துப்புரவுப் பணியாளர்கள் முரளி, வெங்கடேசன் உள்ளிட்டோர் பணியில் ஈடுப
    ட்டிருந்தனர்.
    அப்போது, நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, வழக்குரைஞர் செந்தில், பணியாளர்களை தடுத்தும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கொசு மருந்து அடிக்கும் எந்திரம், பணியாளர்களின் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
    இதுகுறித்து, விநாயகம் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    அதன்பேரில் வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைது செய்யக்கோரி, வாலாஜாபேட்டை நகராட்சி வளாகத்தில் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காசி தலைமையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
    இதையடுத்து, அங்கு வந்த நகராட்சி ஆணையர் அசோக்குமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அதன்பேரில் துப்புரவுப் பணியாளர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு
    ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai