சுடச்சுட

  

  தோல் தொழிலில் எதிர் வரும் 2017-2018-ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
   சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் லெதர் டெக்னாலஜியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஆம்பூர் வர்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய கண்காட்சியை என்எம்
  இஜட் குழுமத் தலைவர் என்.எம். ஜக்கரியா தொடங்கி வைத்தார்.     
   அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், தாய்லாந்து, ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்று அரங்குகளை அமைத்திருந்தன. அரங்கில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத தோல் பதனிடும் ரசாயனங்கள், புதிய ரக நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட தோல்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  
  மேலும் உற்பத்தியாளர் மற்றும் வாங்குபவர்களின் நேரடியான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
   கண்காட்சியில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் லெதர் டெக்னாலஜியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஷபீக் அஹமத்,  நிப்ராஸ் குழுமத் தலைவர் மதார் கலீலூர் ரஹ்மான், இந்தியன் ஷூ பெடரேஷனின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.பி. மனோகர், ஆம்பூர் தோல் தோல் தொழிலதிபர்கள் சங்க கௌரவச் செயலாளர் எஸ்.பையாஸ் அஹமத், ராணிப்பேட்டை சிப்காட் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குநர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   நவீன தொழில்நுட்பங்களுக்கான கண்காட்சிகள் வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிக்கு செல்ல முடியாத தோல் தொழிலதிபர்கள் தற்போது ஆம்பூரில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்க பெரும் வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்திருந்தது.
   தோல் தொழிலில் தற்போது நிலவும் மந்த நிலை மாறி நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருந்ததாக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் லெதர் டெக்னாலஜியின் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai