சுடச்சுட

    

    பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞருக்கு உதவிய எம்எல்ஏ!

    By DIN  |   Published on : 27th October 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூரில் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி புதன்கிழமை அனுப்பி வைத்தார்.
    ஆம்பூர் செளராஷ்டிரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் புதன்கிழமை மாலை நகரப் பேருந்தில் பயணம் செய்தார். ஆம்பூர் புறவழிச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது, திடீரென பேருந்தில் இருந்து தவறி விழுந்த சதீஷ் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் காயமடைந்தவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai