Enable Javscript for better performance
"பொது சிவில் சட்டம் கொண்டு வர முயன்றால் போராட்டம் வெடிக்கும்'- Dinamani

சுடச்சுட

    

    "பொது சிவில் சட்டம் கொண்டு வர முயன்றால் போராட்டம் வெடிக்கும்'

    By DIN  |   Published on : 27th October 2016 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுசிவில் சட்டம் கொண்டு வர முயன்றால் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என அதன் மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா கூறினார்.
     வாணியம்பாடி நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     இந்திய அரசியல் சட்டத்தின் 25 ஏ பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது.  சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாக்க பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் சிறுபான்மைத்துறையும் எடுக்கும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai