சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 27th October 2016 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
     வேலூர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான வலுதூக்கும் போட்டிகள் குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.
     இதில் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எம்.பாஸ்கர், வி.கிஷோர்குமார் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், தினேஷ்பாலாஜி, கிரிபிரசாத் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், ஆர்.ரிஷி, டி.அபிஷேக் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.  இதையடுத்து, சாதனை படைத்த மாணவர்களை பள்ளிச் செயலர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், தலைமையாசிரியர் ஜி.புருஷோத்தமன், உதவித் தலைமையாசிரியர் எஸ்.நேதாஜி, ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே.சீனிவாசன், ஆசிரியர் தமிழ்திருமால், உடற்கல்வி ஆசிரியர் கேசவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai